ஆல் இன் ஒன் சிக்கன் கிரேவி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

ஆல் இன் ஒன் சிக்கன் கிரேவி

சிக்கன் – 500 கிராம்
பெரிய வெங்காயம் -2
தக்காளி -3
சிக்கன் மசாலா -2 ஸ்பூன்
வர மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி – தேவையான அளவு
ஆயில் – 3 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன
பிரியாணி எலசெட் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். கடாய் நன்று சூடான பிறகு அதில் மூன்று ஸ்பூன் ஆயில் ஊற்றவும். ஆயுள் நன்று சூடான பிறகு பிரியாணி மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். இது நன்றாக புரிந்த பிறகு கட் பண்ணி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை நன்றாக வதக்கவும். பின்பு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இது நன்றாக வதங்கிய பிறகு கட் பண்ணி வைத்த தக்காளியை சேர்க்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இது நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்த 500 கிராம் சிக்கனை சேர்க்கவும். சேர்த்து ஒரு மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும். பின்பு இதில் சிக்கன் மசாலா, வர மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றை மேலே சொன்ன அளவுபடி போட்டுக் கொள்ளவும். பின்பு நன்றாக கலந்து விட்டு என்னை திரிந்து வரும். இப்பொழுது தேவைப்பட்டால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக சிக்கனை வேக வைத்தால் நமக்கு சிக்கன் கிரேவி தயார். இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளவும். இந்த சிக்கன் கிரேவி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் ரைஸ் போன்ற ஆல் இன் ஒன் கிரேவியாகும் இதை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Read Previous

மிளகு தூக்கலா போட்டு இப்படி செட்டிநாட்டு ஸ்பெஷல் சிக்கன் மிளகு மசாலா செஞ்சு பாருங்க..!!

Read Next

‘திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி’.. ஓபிஎஸ் பேட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular