“சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது” – வேல்முருகன்!

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ம் வகுப்பு சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கு அச்சம் ஏற்படும் நிலை உருவாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், “சிங்கப்பெண்” என்ற பெயர் மட்டும் போதாது; ஒரு குழந்தை அச்சமின்றி பள்ளிக்குச் சென்று, தனது உயிரும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்ட நிலையில் வீடு திரும்புவதே அந்த அமைப்பின் உண்மையான வெற்றி என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Read Previous

“விரைவில் முடிவு வரும்” – திண்டுக்கல் லியோனி விமர்சனம்!

Read Next

விபத்து நடந்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: புதிய விதிமுறைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular