“விரைவில் முடிவு வரும்” – திண்டுக்கல் லியோனி விமர்சனம்!

 

 

சட்டப்பேரவை நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, “ரம்மி விளையாட்டில் 13-ம் ஜோக்கர்களாக இருப்பது போலவும், இசை நிகழ்ச்சியில் அனைத்து இசைக்கருவிகளும் ஜால்ராக்களாக மாறியது போலவும், சட்டமன்றம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது வெவ்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு வெவ்வேறு அமைச்சர்கள் பதிலளித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை விமர்சித்த அவர், சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், “இன்னும் இந்த அக்கிரமம் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் இதற்கு முடிவு வரும்” என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

Read Previous

சென்னை கோவளத்தில் 19, 20-ல் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு!

Read Next

“சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது” – வேல்முருகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular