சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்: தவெக அரசை கண்டித்து ஆக.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்த விவகாரத்தை முன்வைத்து தவெக அரசுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

சிறிய பட்டாசு ஆலைகள் தொடர்பான பிரச்சினை மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

எ.வ.வேலு மீது ரூ.8 கோடி ஊழல் புகார்! அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Read Next

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமையா? போலீசார் விசாரணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular