கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




