சிவலிங்கத்தில் ஊற்றிய எண்ணெய் பால் போல் மாறியதாக பரவும் தகவல்.. பக்தர்கள் குவிந்த கோவில்..!!

 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம்பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோவிலில் நேற்று பூசாரி வழக்கம்போல் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்துள்ளார். அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய், பால் போன்ற வெண்மை நிறத்தில் மாறி வழிந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமும் பக்தி பரவசமும் அடைந்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர்.

சிவலிங்கத்தில் ஊற்றிய எண்ணெய் பாலாக மாறியதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிலர் இந்த நிகழ்வு குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து இதுவரை அறிவியல் பூர்வமான விளக்கமோ அல்லது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்ட தகவலோ வெளியாகவில்லை.

 

Read Previous

இளைஞரை பின்தொடரும் இரண்டு பாம்புகள்.. வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?..

Read Next

போக்குவரத்து சிக்னலே இல்லாத நாடு தெரியுமா?.. வித்தியாசமான போக்குவரத்து முறையுடன் இயங்கும் பூட்டான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular