சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

 

கண்டிப்பா இது தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி வீட்ல இருக்குறவங்கள அசத்துங்க.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும். இப்போது சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

குறிப்பு:

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதனால் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது..

Read Previous

வீட்டிலேயே வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு செய்வது இவ்வளவு சுலபமா..!! சுவையான செய்முறை இதோ..!!

Read Next

இந்த சட்னியை செய்தால் நொடிப்பொழுதில் சட்னி காணாமல் போய்விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular