வீட்டிலேயே வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு செய்வது இவ்வளவு சுலபமா..!! சுவையான செய்முறை இதோ..!!

நம் அனைவருக்கும் இறைச்சி என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக வஞ்சரம் மீன் குழம்பு வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். அப்படி இன்று வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் – 1 கிலோ,

தேங்காய் பால் – 3 கிண்ணம்,

வெங்காயம் – 2,

தக்காளி – 5,

பூண்டு – 3,

இஞ்சி – சிறு துண்டு,

பச்சை மிளகாய் – 6 அல்லது காரத்திற்கேற்ப,

மஞ்சள் தூள் – 1 கரண்டி,

மிளகாய் தூள் – 2 கரண்டி,

மல்லித்தூள் – 1 கரண்டி,

கறிவேப்பில்லை – சிறிதளவு,

கல் உப்பு – தேவையான அளவு,

செய்முறை: 

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளியை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அதன் பின் இஞ்சி பூண்டு ஆகியவற்றை பொடிப்பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கிய பின் கல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதித்த பின்பு மீன் துண்டுகளை போட்டு வேக வைக்கவும். மீன் வெந்த பிறகு தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மீன் குழம்பு தயார்.

Read Previous

நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Read Next

சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular