இந்திய ரயில்வேயின் சென்னை Integral Coach Factory (ICF)-ல் 2026ஆம் ஆண்டிற்கான Apprentice பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,010 காலியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹8,200 முதல் ₹9,600 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Integral Coach Factory (ICF), சென்னை |
| அறிவிப்பு எண் | PB/RR/39/App/2026 |
| பதவி | Apprentice |
| மொத்த காலியிடங்கள் | 1,010 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்கம் | 08.08.2026 |
| கடைசி தேதி | 07.09.2026 மாலை 5.30 மணி |
கல்வித் தகுதி
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிப்பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
உதவித்தொகை
- 10th Pass Freshers – மாதம் ₹8,200
- 12th Pass Freshers – மாதம் ₹9,600
- Ex-ITI Candidates – மாதம் ₹9,600
வயது வரம்பு
ITI Candidates:
- குறைந்தபட்ச வயது – 15 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது – 24 ஆண்டுகள்
Non-ITI Candidates:
- குறைந்தபட்ச வயது – 15 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது – 22 ஆண்டுகள்
அரசு விதிமுறைகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
SC, ST, பெண்கள், PwBD மற்றும் Ex-Servicemen பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ₹100 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
ICF Apprentice பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படாது. விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்பட்டு, பின்னர் Certificate Verification நடைபெறும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
ICF-ன் அதிகாரப்பூர்வ Apprentice Portal-க்கு சென்று முதலில் Recruitment Notification-ஐ முழுமையாகப் படிக்க வேண்டும்.
பின்னர் Mobile Number அல்லது Email ID மூலம் Registration செய்து, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
தேவையான 10th Mark Sheet, ITI Certificate, புகைப்படம், கையொப்பம் மற்றும் Community Certificate உள்ளிட்ட ஆவணங்களை upload செய்து, பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு Application Form-ஐ Submit செய்து, Application Form / Registration Number-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி: 08.08.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.09.2026 மாலை 5.30 மணி
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு ICF வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, கல்வித் தகுதி, வயது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் சரிபார்த்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு:




