சைபர் குற்றங்களில் இருந்து வங்கி பணத்தை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வலிமையான கடவுச்சொற்களை பயன்படுத்துவதுடன், OTP, CVV, ATM PIN உள்ளிட்ட ரகசிய வங்கி விவரங்களை எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் கிடைக்கும் இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளில் வரும் இணைப்புகளை (Links) திறக்காமல் இருப்பதுடன், போலியான தொலைபேசி அழைப்புகளை நம்பி தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Read Previous

BPCL-ல் 154 காலிப்பணியிடங்கள்! டிப்ளமோ படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!!

Read Next

காதலை சொல்லும் முன் இதை கவனியுங்கள்: சரியான நேரமும் அணுகுமுறையும் முக்கியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular