மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் 154 காலிப்பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: Chemical Engineering / Chemical Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை.
சம்பளம்: மாதம் ₹26,500 முதல் ₹34,000 வரை.
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 13, 2026.
முழுமையான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.




