டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த பேரணியை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கைது நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




