டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால், ‘I.N.D.I.A’ கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி போராட்டம் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.




