ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளதாகக் கூறப்படும் தி இந்து நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி, தவெக அரசின் போக்கு குறித்து அந்த நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல்வருக்கு புரியும்படி கூற வேண்டும் என்றால், இந்திய அளவில் புகழ்பெற்ற பத்திரிகையின் நடுப்பக்கம் நங்குநங்கென்று குட்டியுள்ளது” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கைகள் மூலம் ஆட்சியின் குறைகளை மறைக்க முயன்றால், அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




