தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை கடந்துள்ளதாக மருத்துவத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான உணவுப் பழக்கங்கள், புகையிலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணிகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, உடலில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.




