“தமிழக நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை” – கமல்ஹாசன்!

Oplus_16908288

 

 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுகுறித்து பின்னர் விரிவாக பேசுவதாக தெரிவித்தார்.

 

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பேசிய அவர், திமுகவின் நிலைப்பாட்டை அந்தக் கட்சியினரே தெளிவுபடுத்துவார்கள் என கூறினார். அதேநேரத்தில், தமிழகத்தின் நலனுக்கு எதிரான எந்த முடிவுக்கும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

காவிரி நீர் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதே பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

Read Next

பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular