கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர், பள்ளி வகுப்பறை முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறை முன்பு மேஜை அமைக்கப்பட்டு, அதில் உணவு மற்றும் மதுவுடன் சாப்பிடும் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவிகள் மது அருந்தியதை மற்றொரு மாணவி வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




