தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்! முதல்வர் விஜய் அதிரடி பேச்சு!

 

 

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் அதை நிச்சயம் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் கொள்கைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்போம் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசையும் எதிர்க்கத் தயங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

 

மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த விஜய், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

தமிழ்நாட்டை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், நல்லதை மட்டுமே நோக்கி முன்னேறுவோம் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Read Previous

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு நிதி உயர்வு! முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு!

Read Next

ஹெல்மெட் இல்லாமல் வரும் போலீசாரின் வாகனம் பறிமுதல்! ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular