தமிழ் வழியில் படித்து மணிப்பூரின் இளம் மாவட்ட ஆட்சியரான தஞ்சை பெண்!

 

 

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

 

தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது பயணத்தை தொடங்கினார்.

 

மணிப்பூரில் ஏற்கனவே பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி, தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்திய ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு தற்போது காக்சிங் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தமிழ் வழியில் படித்து, தனது விடாமுயற்சியால் இளம் வயதிலேயே உயர்ந்த நிர்வாகப் பொறுப்பை அடைந்துள்ள ஏஞ்சலின் ரெனிட்டாவின் சாதனை பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Read Previous

வீட்டில் இந்த மின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க! ஆபத்து ஏற்படலாம்!

Read Next

கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular