சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருக்கான அறை, செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும் தேவையான அலுவலக வசதிகளை புதிய இடத்தில் ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்ததும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடமாற்றம் தலைமைச் செயலகத்தின் நிர்வாக செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.




