திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

 

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

 

அதிகாலை முதலே நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் சுவாமி தரிசனத்திற்காக பொது தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

 

கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 

மேலும், பக்தர்களின் வாகன வருகை அதிகரித்ததால் திருச்செந்தூர் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

Read Previous

தமிழகத்தின் 5 பாரம்பரிய உணவுகளுக்கு GI குறியீடு பெற விண்ணப்பம்!

Read Next

தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular