தமிழகத்தின் 5 பாரம்பரிய உணவுகளுக்கு GI குறியீடு பெற விண்ணப்பம்!

 

 

தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI) பெற தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

 

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் பன்றிமலை காபி, கடலூர் காராமணிக்குப்பம் கருவாடு, தஞ்சை கும்பகோணம் டிகிரி காபி, நீலகிரி நெய், மதுரை பாலமேடு பால்கோவா ஆகிய 5 பொருட்களுக்கு GI குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த GI அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், இப்பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து, அவற்றை உற்பத்தி செய்யும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பேன்! – டிரம்ப்!

Read Next

திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular