திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் சோகம்! காதல் ஜோடி மர்ம மரணம்!

 

 

கர்நாடகாவில் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24), தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளையில், அவரது வருங்கால கணவரான கண்ணூரைச் சேர்ந்த அமலும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 

இருவரும் சம்பவத்திற்கு முன்பு வீடியோ காலில் பேசியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இருவரின் திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து கர்நாடகா மற்றும் கேரள காவல்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

Read Next

கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular