திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

 

 

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டதாக கூறப்படும் அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் தனுஷ் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே சென்னையிலும் இதுபோன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், தற்போதைய அரசின் நிர்வாகத் திறனை கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி, சமூக விரோதிகளுக்கு காவல்துறை மற்றும் அரசின் மீது அச்சம் இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

 

மாணவர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

80-வது சுதந்திர தினம்: தேசத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்! எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Read Next

தேசியக் கொடியேற்றியபோது திடீர் மயக்கம்! விழாவில் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular