நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தியாகிகளின் வீரம், தீரம் மற்றும் அளப்பரிய தியாகத்தால் நமக்கு கிடைத்த வளமிகு நாட்டை போற்றி பாதுகாக்க வேண்டும் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சமூகநீதி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியாவை மேலும் வலிமையான நாடாக கட்டமைக்க அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதே இந்த சுதந்திர தினத்தின் உறுதிமொழியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.




