நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது இருக்கும் என்பதால், திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான AGS Entertainment நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, தங்களது திரையரங்குகளுக்கு ஜனநாயகன் படத்தை கொண்டு வர கடுமையாக முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பல வருடங்களுக்கு பிறகு (துப்பாக்கி) நாங்கள் ஒரு படத்திற்காக போராடினோம். எதுவாக இருந்தாலும் படத்தை தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தோம். எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ தளபதியின் கடைசி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக (FDFS) தான். நாளை கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கப் போகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஜனநாயகன் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
After many years ( Thuppakki ) we fought for a movie that we did not want to miss at any cost. For my one and only fav hero of all time my Thalapathy’s one last dance One last FDFS at @agscinemas Thank you @Jagadishbliss for making this happen 🤗 Tomorrow’s celebration is going…
— Archana Kalpathi (@archanakalpathi) July 22, 2026




