துவரம்பருப்பு சூப் செய்வது எப்படி..??

Oplus_131072

துவரம்பருப்பு சூப் செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1

செய்முறை

துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.
குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

Read Previous

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular