Oplus_131072
தேவையான பொருட்கள்
மட்டன் – 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 4 கப்
பச்சை மிளகாய் – 3
வறுத்த வெங்காயம் – 1/4 கப்
தயிர் – 150 கிராம்
வரமிளகாய்த்தூள் – 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி – தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு,நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் – 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ – சிறிதளவு
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 3
ரம்பை இலை – 2
ஏலக்காய் – 2
பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 3
பச்சை ஏலக்காய் – 3
கறுப்பு ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 3
ஜாதிபத்திரி – 1
வறுத்த வெங்காயம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.
சுத்தம் செய்த மட்டனில், பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.
பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.
இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.




