“த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தா?” – முதல்வர் விஜயை விமர்சித்த முன்னாள் அமைச்சர்!

 

 

சுதந்திர தின விழா மேடையில் முதல் வரிசையில் நடிகை த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தில் முதல்வர் விஜய் இடம் ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், த்ரிஷாவுக்கு முதல்வரின் அருகிலேயே முக்கிய இடம் வழங்கப்பட்டதாகக் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், “தனது இருக்கைக்கு அருகிலேயே துணை முதல்வருக்கான அரியாசனத்தையும் த்ரிஷாவுக்கு முதல்வர் வழங்க முன்வருவாரோ?” என விமர்சித்த அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சரின் இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

Read Next

“கருக்கலைப்பு பெண்ணின் உடல் உரிமை!” – சட்டப்பேரவைத் தலைவருக்கு CPI கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular