திருவண்ணாமலை நகராட்சி கட்டடத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரசாயனப் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரசாயனப் பொருட்கள் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




