நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ஏற்பட்ட நிதி இழப்பால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, சுமார் ரூ.5 லட்சம் அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த ஜோபி, தனது மனைவி ஜோத்ஸ்னா மற்றும் இரு குழந்தைகளுடன் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் ஜோத்ஸ்னா மற்றும் மகள் மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜோபி மற்றும் அவரது 9 வயது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு..!!

Read Next

பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னா: வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular