பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்: சிவகாசியில் பரபரப்பு!

 

 

சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரியும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆலைகள் மூடப்பட்டு வேலையின்றி தவிக்கும் காலங்களில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

மேலும், பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Read Previous

திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

Read Next

பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் ‘மறைமுக’ அறிகுறிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular