தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்கிறதா என்பதையும், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளின் தரம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் இருப்பில் உள்ள மருந்துகளின் விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், சுகாதார சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.




