மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு! இந்த விஷயங்களை சரிபார்க்க மறக்காதீங்க!

 

 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆகஸ்ட் மாதத் தவணையான ரூ.1,000, இன்று (ஆக.15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆனால், வங்கிக் கணக்கில் KYC புதுப்பிக்கப்படாமல் இருப்பது, கணக்கு செயலற்ற நிலையில் இருப்பது அல்லது ரேஷன் கார்டு மற்றும் வங்கி விவரங்களில் முரண்பாடு இருப்பது போன்ற காரணங்களால் சிலருக்கு தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், KYC உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது.

 

மேலும், ரேஷன் கார்டு மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பெயர் உள்ளிட்ட முக்கிய விவரங்களில் வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது வங்கி மூலம் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!

Read Next

PF பணம் எடுக்க புதிய விதிகள்? ஆண்டுக்கு 2 முறை 75% வரை முன்பணம் பெறலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular