பள்ளி பால்கனி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.

 

பள்ளியின் பால்கனி முகப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு இருந்த மாணவர்கள் சிக்கினர். இதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

மேலும் இரண்டு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு!

Read Next

பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular