பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்தி வைத்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு ‘விஜய்’ பெயர் சூட்டவும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன் மூலம் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது நன்றியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக ஏகனாபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

பள்ளி பால்கனி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு!

Read Next

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை! 24 லட்சம் பேர் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular