கோவை கல்லூரி மாணவர் படுகொலையைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் ஒருவர் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை அரசு முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.




