கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே வாழை மரத்தை வெட்டியபோது கலைந்த குளவி கூட்டில் இருந்து வெளியேறிய குளவிகள் தாக்கியதில், 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் நிச்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சிறுவனின் தந்தை வெங்கடேஷும் குளவிகள் தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




