பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் தனது 97-வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘The Reivers’, ‘The Rose’, ‘On Golden Pond’ உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவான ‘On Golden Pond’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
மார்க் ரைடெலின் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




