Oplus_131072
பூசணி விதை:
பூசணி விதையில் புரதம்,இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் இ, பாஸ்பரஸ்,மக்னீசியம், தாமிரம்,துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளது.
பயன்கள்:
பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான எனர்ஜியைத் தருகிறது மட்டுமல்லாமல் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டுகிறது.
ஒமேகா-3 அமிலம் அதிகம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இதயத்தின் இயக்கம்,ரத்த நாளங்களின் தளர்வு மற்றும் குடலின் தடையில்லா செயல்பாடு போன்றவற்றிற்கு உதவுகிறது.
தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.




