பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 500 மாணவர்கள் மற்றும் 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியே உள்ள சில தெருவோரக் கடைகளின் சுகாதாரமற்ற சூழலே காய்ச்சல் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என பள்ளி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, சுகாதார விதிமுறைகளை மீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.




