பாய் வீட்டு பிரியாணி போல உங்கள் பிரியாணி மாற ஒரு தீர்வு..!!

நம் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அதில் நிச்சயமாக பிரியாணி இருக்கும். இதில் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மீன் பிரியாணி பிரான் பிரியாணி பன்னீர் பிரியாணி வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி என பல விதங்கள் உண்டு. அதிலும் நமக்கு பாய் வீட்டு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி பிடித்திருக்க அந்த பிரியாணியில் என்னதான் சேர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா. அதற்கான பதில் ஒரு மசாலா பொடி தான். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை:

தனியா – 100 கிராம்

சோம்பு – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

சுருள் பட்டை – 25 கிராம்

சாய் சீரகம் – 25 கிராம்

கிராம்பு – 15 கிராம்

ஜாதிக்காய் – 3 ( 3 காய் மட்டும் நுணுக்கியது )

அண்ணாச்சி பூ – 25 கிராம்

ஏலக்காய் – 15 கிராம்

ஜாதி பத்திரி – 5 கிராம்

மராட்டி மொக்கு – 25 கிராம்

பிரியாணி இலை – 15 கிராம்

காய்ந்த ரோஜா இதழ் – 25 கிராம்

கல்ப்பாசி – 10 கிராம்

பெரிய ஏலக்காய் – 10 கிராம்

செய்முறை:

அடுப்பைப் பற்ற வைத்து தீயை குறைவான அளவில் வைத்துக்கொண்டு ஒரு கடாயை வைத்து சூடு படுத்தியதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி தனியா சோம்பு மிளகு சுருள்பட்டை சாய் சீரகம் கிராம்பு ஜாதிக்காய் அன்னாசி பூ ஏலக்காய் ஜாதிபத்திரி மராட்டி மொக்கு பிரியாணி இலை காய்ந்த ரோஜா இதழ் கல்பாசி பெரிய ஏலக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு இரண்டு நிமிடம் வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு இவை அனைத்தும் சூடு ஆறிய பின் ஒரு ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் உங்களது பிரியாணியில் சுவை கூட்ட மசாலா தயார். இதை ஒரு சுத்தமான பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

Read Previous

காளான் சுக்கா இந்த மாறி ஒரு முறை செஞ்சு பாருங்க..!!

Read Next

ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular