காளான் சுக்கா இந்த மாறி ஒரு முறை செஞ்சு பாருங்க..!!

சப்பாத்தி தோசை சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் காளான் சுக்கா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி ஆகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காளான் – 300 கிராம்,

பெரிய வெங்காயம் – 3,

பச்சை மிளகாய் – 2,

சோம்பு, லவங்கம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை – சிறிதளவு,

இஞ்சி-பூண்டு விழுது – 2 கரண்டி,

சீரகம் – 2 கரண்டி,

பெருஞ்சீரகம் – 2 கரண்டி,

மிளகு – 2 கரண்டி,

மல்லித்தூள் – 1 கரண்டி,

மிளகாய் தூள் – 2 கரண்டி,

கரம் மசால் – 1 கரண்டி.

செய்முறை:

காளானை நன்கு சுத்தம் செய்த பிறகு இரண்டாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சோம்பு லவங்கம் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தும் லேசாக வருப்பட்டதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்பின் அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்.

சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின் காலாணை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். காளான் வதங்கியதும் உப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் கரம் மசாலா நீர் சேர்த்து பத்து நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். நீரை கம்மியாகவே ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் சுவை அதிகமாக இருக்கும். இறுதியில் மிளகு சீரகம் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தீயில் தனித்தனியாக வறுத்து காளானுடன் சேர்த்து கிளறி மல்லி தலைகளை சிறிது போட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சுக்கா தயார்.

Read Previous

ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

Read Next

பாய் வீட்டு பிரியாணி போல உங்கள் பிரியாணி மாற ஒரு தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular