மணமணக்கும் பனீர் பிரியாணி செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிய செய்முறை..!!

சைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக இருக்கும் பனீர் பிரியாணி, சுவையிலும் மணத்திலும் அசைவ பிரியாணிக்கு இணையான ஒரு சிறப்பான உணவாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி, தற்போது பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான பனீர் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பனீர் ஊற வைக்க:

  • பனீர் – 400 கிராம்
  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1 டீஸ்பூன்

பிரியாணிக்கு:

  • எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்
  • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை – 2 துண்டுகள்
  • கிராம்பு – 5
  • ஏலக்காய் – 3
  • பிரியாணி இலை – 2
  • பெரிய வெங்காயம் – 3 (நீளமாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் – 1 கப்
  • கேரட் – 1 கப்
  • பச்சை பட்டாணி – 1 கப்
  • குடைமிளகாய் – 1
  • புதினா – 1 கைப்பிடி
  • கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • பாசுமதி அரிசி – 1 கப் (½ மணி நேரம் ஊற வைத்தது)
  • தண்ணீர் – 2 கப்

மசாலா பொருட்கள்:

  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1½ டீஸ்பூன்
  • சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பனீரை பெரிய துண்டுகளாக நறுக்கி, அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பிறகு, பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும்.

அதன் பிறகு ஊற வைத்த பனீரை சேர்த்து மெதுவாக கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், ஊற வைத்த பாசுமதி அரிசியை கழுவி சேர்த்து நன்றாக கிளறவும்.

பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அடுப்பை அணைத்து, 15 நிமிடங்கள் தம் போடவும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து மெதுவாக கிளறினால், மணமணக்கும் சுவையான பனீர் பிரியாணி தயார்!

இந்த பிரியாணியை ரைத்தா, வெங்காய பச்சடி அல்லது தயிருடன் பரிமாறலாம்.

Read Previous

மட்டன் பிரியர்களே கவனம்: வாரத்திற்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்?..

Read Next

குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்: ஆரோக்கிய நன்மைகள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular