மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரிங்கு என்பவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து தனது ஒரு வயது பெண் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், தனது மனைவியையும் ஆற்றில் தள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

இதனிடையே, ஆற்றில் வீசப்பட்ட ஒரு வயது குழந்தையை மீட்க தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைக்கு ஏற்பட்ட இந்த நிலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதில் அரசியல் இல்லை!” – மாணிக்கம் தாகூர்!

Read Next

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular