சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்!

 

 

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, மியான்மரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் 30 வயது வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 967 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இருவரையும் கைது செய்து கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

Read Next

தூத்துக்குடியில் மரக்கடை தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular