மீன் சந்தையில் நூதன திருட்டு: ரூ.1 லட்சம் மீன்களை அள்ளிச் சென்ற மர்மநபர்!

 

 

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல மீன் சந்தையில், ஃப்ரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மீன்கள் திருடப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் மீன்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்த திருட்டால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீன் வியாபாரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மர்மநபரை விரைவில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Previous

சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

Read Next

சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular