சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!

 

 

சென்னை கிண்டி அருகே உள்ள அசோக் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.

 

இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

 

முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மீன் சந்தையில் நூதன திருட்டு: ரூ.1 லட்சம் மீன்களை அள்ளிச் சென்ற மர்மநபர்!

Read Next

“நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்கள்; அவைக்கு வருவதில்லை” – திருச்சி சிவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular