முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது..!!

 

 

தமிழக முதல்வர் விஜயை குறித்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சட்டசபை தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவரது இல்லத்திற்கே சென்று விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

“ஊழலுக்கு இடமில்லை… தவறு செய்தால் உடனடி நடவடிக்கை” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி..!!

Read Next

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular