முன்னாள் படைவீரர்களுக்கு புதிய அறிவிப்புகள்! திருமண நிதியுதவி ரூ.50,000 ஆக உயர்வு!

 

 

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலன் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

இதன்படி, முன்னாள் படைவீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தியாகிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியும் ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

வீட்டிலேயே கத்திரிக்காய் வளர்க்கலாம்! 60-70 நாட்களில் அறுவடை செய்யும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்!

Read Next

முதன்முறை எம்எல்ஏக்களுக்கு கார் வசதி? தமிழக அரசு பரிசீலனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular